துபாய் கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி 164 ரன்கள் எடுத்தது.
அந்த இலக்கை பெங்களூர் அணி விரட்டியது. முதல் ஓவரில் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமலும், கோலி மூன்றாவது ஓவரில் 4 ரன்கள் எடுத்தும் வெளியேறினர். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் உடன் 40 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கே.எஸ். பரத். ஏபிடி 26 ரன்களில் அவுட்டானார்.
தொடர்ந்து மேக்ஸ்வெல் களத்திற்கு வந்தார். இருவரும் 111 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட கடைசி பந்தில் சிக்சர் விளாசி பெங்களூர் அணியை வெற்றி பெற செய்தார் பரத். 52 பந்துகளில் 78 ரன்களை எடுத்திருந்தார். மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 51 ரன்களை எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற போதும் பெங்களூர் அணி மூன்றாவது இடத்தையே தக்க வைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை உறுதியாகியுள்ளது. அதனால், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அது எலிமினேட்டர் ரவுண்ட். அதனால், அந்தப் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றாலும் சென்னை - டெல்லி அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மீண்டும் மோதி வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3BqqlOlதுபாய் கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி 164 ரன்கள் எடுத்தது.
அந்த இலக்கை பெங்களூர் அணி விரட்டியது. முதல் ஓவரில் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமலும், கோலி மூன்றாவது ஓவரில் 4 ரன்கள் எடுத்தும் வெளியேறினர். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் உடன் 40 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கே.எஸ். பரத். ஏபிடி 26 ரன்களில் அவுட்டானார்.
தொடர்ந்து மேக்ஸ்வெல் களத்திற்கு வந்தார். இருவரும் 111 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட கடைசி பந்தில் சிக்சர் விளாசி பெங்களூர் அணியை வெற்றி பெற செய்தார் பரத். 52 பந்துகளில் 78 ரன்களை எடுத்திருந்தார். மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 51 ரன்களை எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற போதும் பெங்களூர் அணி மூன்றாவது இடத்தையே தக்க வைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை உறுதியாகியுள்ளது. அதனால், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அது எலிமினேட்டர் ரவுண்ட். அதனால், அந்தப் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றாலும் சென்னை - டெல்லி அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மீண்டும் மோதி வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்