சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று ஆஜராகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜய பாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த ஜூலை மாதம் 21-ம்தேதி வழக்குப்பதிவு செய்தனர். வருமானத்திற்கு அதிகமாக 55 சதவிகிதம் வரை சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஜூலை 22ஆம் தேதி அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 25.56 லட்சம், பல சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி எனவும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வைத்து எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டார். இதையடுத்து கடந்த 19-ம்தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2-வது சம்மனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனுப்பினர். அதன்படி இன்று 25-ம்தேதி காலை 11 மணி அளவில் ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் ஆஜராக உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை அதிகாரியான கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் லதா விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 'ரூ.70 கோடிக்கு முதலீடு செய்த இளங்கோவன்' - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3b5n77pசொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று ஆஜராகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்