Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சி கொடுப்பதா?” - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

"தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சி கொடுப்பதா?” என்று கேள்வி கேட்டு, தமிழக மாணவர்களுக்கு உரிய மொழியில் பயிற்சி கொடுக்க 'நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்' நிறுவன தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் (பொது) பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் ஆகஸ்டு 24ம் தேதி அன்று அந்நிறுவனம் வெளியிட்டது. இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெறும் நிலையில், முதல் கட்டத்தேர்வு அக்டோபர் 16, 2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

image

இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி தேர்வர்களுக்கு முதல் கட்ட தேர்வுக்கு முன்பாக பயிற்சி தரப்படும். ஒவ்வொரு வருடமும் முக்கியமான மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். அந்தவகையில் இந்த வருடம் கடந்த அக். 4 முதல் இவ்வகுப்புகள் நடந்து வருகிறது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஆன்லைனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வகுப்பும் நடக்கிறது. மிகவும் ஆர்வத்தோடு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்த பல தேர்வர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். ஆனால், முதல் நாளிலேயே இந்த தேர்வர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் இந்தி வழியில் தான் பயிற்சி தரப்பட்டிருந்தது.

அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய இந்தப் பயிற்சி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்தியில்தான் வகுப்புகள் நடக்கின்றன. இதனால் விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.இவ்வகுப்பில், ஆங்கில மொழித்தாளுக்கான பயிற்சி வகுப்பையும் அவர்கள் இந்தியில் தான் நடத்தியிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி: அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது - சு.வெங்கடேசன் எம்பி

இக்காரணங்களை மேற்கோள் காட்டி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நியு இந்தியா அஸ்யூரன்ஸ் தலைவர் ஸ்ரீ அதுல் சகாலிக்கு கடிதமொன்றை தற்போது எழுதியுள்ளார். அதில் அவர், “தேர்வுக்கு முன்பாக, ஒரு குறுகிய காலப் பயிற்சி ஒன்றை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும். அதோடு, தேர்வர்களுக்குப் புரியும் மொழியில் நடத்திட வேண்டும்.

image

வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நேரா வண்ணம் உறுதி செய்திட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3mEMH8v

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்