விழுப்புரம் மாவட்டத்தில் விளைநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைத்ததற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்று கூறி விவசாயி ஒருவர் உயர்மின் கோபுரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி அருகே கலிங்கமலை கிராமத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்காக, விவசாயி மணி என்பவரின் 50 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் கூலி வேலைக்கு சென்ற மணியின் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. உயர் மின் கோபுரம் அமைத்த தனியார் ஒப்பந்ததாரர் உரிய இழப்பீடு வழங்காமல் தாமதித்ததால் மணி துயரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது உடல், விளைநிலத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரத்தில் தூக்குப்போட்ட நிலையில் மீட்கப்பட்டது. இதையறிந்து ஆவேசமுற்ற ஊர் மக்கள், செஞ்சி - வேலூர் மாநில நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டனர். திண்டிவனம் சார் ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரின் சமாதானத்தின்பேரில், மறியல் கைவிடப்பட்டது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்