Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ராதா என்றால் ‘மகிழ்ச்சி’: மகளுக்கு ‘ராதா’ என்று பெயரிட்ட நடிகை ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா தனது மகளுக்கு ‘ராதா’ என்று பெயரிட்டுள்ளார்.

தமிழில், ’எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து, ’மழை’, ’சிவாஜி’, ’கந்தசாமி’, ’அழகிய தமிழ்மகன்’, ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ள ஸ்ரேயா, கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ்வை மும்பையில் திருமணம் செய்துகொண்டார். ஆண்ட்ரே, பல ரெஸ்டாரண்ட்களையும் ரஷ்யாவில் நடத்தி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு ரஷ்யாவில் வசித்துவரும் ஷ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

image

ஆனால், குழந்தை பிறந்து நான்கைந்து மாதங்களுப்பிறகே சமீபத்தில் ஸ்ரேயா
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இந்த நிலையில், தனது மகளுக்கு ‘ராதா’ என்று பெயரிட்டுள்ளார். இதுகுறித்து, ஸ்ரேயா டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் “எனது அம்மாவிடம் நாங்கள் எந்தப் பெயர் வைக்கலாம் என்று ஆலோசித்தோம். அப்போது அம்மா ராதா ராணி என்று சொன்னார். ராதா என்றால் ரஷ்ய மொழியில் ‘மகிழ்ச்சி’ என்று அர்த்தம். அதனால், 5 நிமிடத்தில் மகளுக்கு ‘ராதா’ என்ற பெயரை முடிவு செய்துவிட்டோம்” என்று உற்சாகமுடன் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2XudJXN

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்