போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட வழக்கில், ஆர்யன் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வந்தது. அதில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: ஆர்யன் கான் வழக்கின் முக்கிய சாட்சி கைது
முன்னதாக சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு திடீர் ஆய்வு நடத்தி, ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரை அக்.3ஆம் தேதி கைது செய்திருந்தனர் அதிகாரிகள். அதில் ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்டிருந்த அவரது 2 நண்பர்களுக்கும் ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டு நிலையில், அவருக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், 25 நாட்களுக்குப் பிறகு இன்று ஆர்யன் கானுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்யன் கானின் ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து நாளை அறிவிப்பதாக மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆர்யன் கானுக்காக மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்துக்கொண்டிருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, போதை பொருள் தடுப்பு முகமை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த வாதங்களின் அடிப்படையிலேயே, தற்போது ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2ZvLXv3போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட வழக்கில், ஆர்யன் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வந்தது. அதில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: ஆர்யன் கான் வழக்கின் முக்கிய சாட்சி கைது
முன்னதாக சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு திடீர் ஆய்வு நடத்தி, ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரை அக்.3ஆம் தேதி கைது செய்திருந்தனர் அதிகாரிகள். அதில் ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்டிருந்த அவரது 2 நண்பர்களுக்கும் ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டு நிலையில், அவருக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், 25 நாட்களுக்குப் பிறகு இன்று ஆர்யன் கானுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்யன் கானின் ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து நாளை அறிவிப்பதாக மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆர்யன் கானுக்காக மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்துக்கொண்டிருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, போதை பொருள் தடுப்பு முகமை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த வாதங்களின் அடிப்படையிலேயே, தற்போது ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்