சீனாவுடன் அமெரிக்கா போர் நடத்த வாய்ப்புள்ளதாக டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபரான ட்ரம்ப் தற்போதைய அதிபர் பைடனை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பைடன் அரசு மிகவும் பலவீனமாகவும் ஊழல் நிறைந்ததாக இருப்பதாகவும் அதை சீனா சற்றும் மதிப்பதில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். இறுதியாக சீனாவுடன் போர் தொடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா வரும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில் ட்ரம்ப்பின் கருத்து வெளியாகியுள்ளது. தைவானில் சீன விமானப்படை போர் பயிற்சி மேற்கொண்டது பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் இப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. முன்னதாக சீனா - அமெரிக்கா இடையே கடும் வர்த்தக மோதலும் நடைபெற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்