14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் முதலாவதாக இறுதிப் போட்டிக்குள் நுழையப் போவது யார் என்பதை தீர்மானிக்கவுள்ள QUALIFIER ONE போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதவுள்ளன. இவ்விரு அணிகளின் பலம், பலவீனம் என்ன பார்க்கலாம்.
ஃபீனிக்ஸ் போல மீண்டெழுந்த சிஎஸ்கே:
13 ஆவது சீசன் ஐபிஎல்லில் ரசிகர்கள் எதிர்பாரா வகையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே, அந்த சீசனின் கடைசி ஆட்டம் முடிந்தவுடன் அணித்தலைவன் தோனி சூளுரைத்தது போலவே 14 ஆவது சீசனில் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்தது. பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை மேற்கொண்ட சிஎஸ்கே, முதல் போட்டியில் இருந்தே பிளே ஆஃப்க்கான முனைப்புடன் விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இருப்பினும் லீக்கில் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியடைந்துள்ளது.
சிஎஸ்கேவின் தூண்களாக ருதுராஜ், டூபிளசி:
அணியின் பேட்டிங் வரிசையில் ருதுராஜ், டூபிளசி, ராயுடு ஆகியோர் தூண்களாக வலுசேர்க்கின்றனர். ருதுராஜ் பவுண்சர் பந்துகளை திறம்பட எதிர்கொள்ள திணறுவது சிறு பின்னடைவாக உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் ஜொலித்த மொயின் அலி அமீரக மண்ணில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மத்திய வரிசையில் கேப்டன் தோனி வழக்கமான அதிரடியை வெளிப்படுத்த திணறுவது கூடுதல் ரணம். ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் பிராவோவின் அதிரடிகள் பேட்டிங்கிற்கு ஆறுதல். பந்து வீச்சில் பவர் பிளே அஸ்திரமாக பார்க்கப்படும் தீபக் சாஹர், ஹேசல்வுட் ஆகியோர் ஃபார்மை இழந்துள்ளது அணிக்கு சிக்கல். இருப்பினும் பிராவோ, ஷர்தூல் தாக்கூரின் உத்திகள் பலம். ரெய்னாவுக்கு மாற்றாக களமிறக்கப்படும் உத்தப்பா ரன் சேர்க்க திணறி வரும் நிலையில் ஜெகதீசனுக்கு வாய்பளிப்பது கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு மாற்றாக சமீபத்தில் அணியில் இணைந்த ட்ரேக்ஸும் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் வேகம், பாண்டிங் விவேகம்:
இளம் கேப்டன் ரிஷப் பந்தின் வேகமும், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் விவேகமும் டெல்லி அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படுகின்றன. பேட்டிங்கில் தவனின் அனுபவம், பிரித்வி ஷாவின் அதிரடியும் பெரும் பலமாக பார்க்கப்படுகின்றன. ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் பந்த் பெரிதளவில் ரன்களைக் குவிக்க திணறுவது சிறு பின்னடைவாக உள்ளது. மத்திய வரிசையில் ஹெட்மெய்ரும், இளம் வீரர் ரிப்பால் பட்டேலும் ஆறுதல் அளிக்கின்றனர். ஸ்பின் ஆல்ரவுண்டர்களான அக்ஷர் பட்டேலும், அஸ்வினும் பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சைப் பொறுத்தவரையில் தென்னாப்பிரிக்க வேக இரட்டையர்களான ரபடாவும், நார்க்கியாவும் துருப்புச் சீட்டுகளாக உள்ளனர். ரபடா விக்கெட்டுகளை வீழ்த்த திணறினாலும், நார்க்கியாவின் வேக பவுண்சர்கள் எதிரணியினரை திக்கு முக்காட வைக்கின்றன. இளம் வீரர் ஆவேஷ் கானின் யார்க்கர்கள் பந்து வீச்சில் டெல்லிக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
தோனியின் வியூகங்களை தகர்ப்பாரா ரிஷப்:
லீக் சுற்றில் சிஎஸ்கேவை எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் டெல்லி அணி வெற்றியை ருசித்துள்ளது. இந்நிலையில் QUALIFIER சுற்றில் தோனியின் புதிய வியூகங்களை ரிஷப் பந்த் தகர்த்து மீண்டும் கோலோச்சுவாரா என்பது போட்டியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3FzD2Zu14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் முதலாவதாக இறுதிப் போட்டிக்குள் நுழையப் போவது யார் என்பதை தீர்மானிக்கவுள்ள QUALIFIER ONE போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதவுள்ளன. இவ்விரு அணிகளின் பலம், பலவீனம் என்ன பார்க்கலாம்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்