நவீன இந்திய பெண்கள் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள், வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற விரும்புகிறார்கள் என கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்திருக்கிறார்
தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) நேற்று நடந்த உலக மனநல தினத்தில் பேசிய கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர், "இன்று, இதைச் சொல்வதற்கு நான் வருந்துகிறேன். இந்தியாவில் உள்ள பல நவீன பெண்கள் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் குழந்தையை பெற்றெடுக்க விரும்பவில்லை. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறவே விரும்புகிறார்கள். நமது சிந்தனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நல்லதல்ல "என்று கூறினார்
இந்திய சமுதாயத்தில் "மேற்கத்திய செல்வாக்கு" பற்றி வருத்தம் தெரிவித்த அமைச்சர், "துரதிருஷ்டவசமாக, இன்று நாம் மேற்கத்திய வழியில் செல்கிறோம். பெற்றோர் நம்முடன் வாழ்வதை நாம் விரும்புவதில்லை. தாத்தா பாட்டி நம்முடன் இருப்பதை மறந்து விட்டோம். இந்தியாவில் 7இல் ஒரு இந்தியருக்கு ஒருவித மனநலப் பிரச்னை உள்ளது. இது லேசானதாக, மிதமானதாக அல்லது கடுமையானதாக இருக்கலாம்” என தெரிவித்தார்.
மேலும்,"மன அழுத்த மேலாண்மை ஒரு கலை, இந்த கலையை இந்தியர்களாக நாம் கற்க வேண்டியதில்லை. மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பதை நாம் உலகுக்கு போதிக்க வேண்டும். ஏனென்றால் யோகா, தியானம் மற்றும் பிராணாயாமம் ஆகியவை நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உலகிற்கு கற்பித்த அற்புதமான கருவிகள் " என்று அவர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்