தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.
9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி மற்றும் 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவி, 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில் 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 7 முனை போட்டி நிலவுகிறது.
தொடர்புடைய செய்தி: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்
தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில், வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 17,130 காவல்துறையினர், 3,405 ஊர்காவல்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் பொதுமக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lfgrtbதமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.
9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி மற்றும் 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவி, 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில் 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 7 முனை போட்டி நிலவுகிறது.
தொடர்புடைய செய்தி: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்
தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில், வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 17,130 காவல்துறையினர், 3,405 ஊர்காவல்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் பொதுமக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்