Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ம.பி.: துர்கை சிலை கரைக்கும் நிகழ்வின் போது கூட்டத்திற்குள் கார் புகுந்து விபத்து

மத்தியப் பிரதேசத்தில் வேகமாக வந்த கார் ஒன்று, அங்கு கூடியிருந்த மக்களின் மீது மோதியதில் ஒரு குழந்தை உட்பட இருவர் காயமடைந்தனர்.
 
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில், நவராத்திரியை முன்னிட்டு துர்கை அம்மன் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வு நேற்றிரவு நடைபெற்றது. அந்நிகழ்வில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சாம்பல் நிற கார் ஒன்று கார், அங்கு கூடியிருந்த மக்களின் மீது மோதியது. இதில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.
 
தகவல்களின்படி, பஜாரியா கிராசிங்கில் உள்ள ரயில் நிலையம் அருகே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடைப்பட்ட இரவில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தின் காட்சிகள் ஒரு கேமராவில் பதிவாகியிருக்கிறது. அந்த காரில் 2 அல்லது 3 பேர் இருந்ததாகத் தெரிகிறது. விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் எண்ணை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3ASUPr0

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்