Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ வழக்கு

https://ift.tt/3pqvLWd

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்த முகமது இர்பான் அகமது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுங்கத் துறையில் விமான உளவுத்துறை பிரிவின் சூப்பரண்ட் ஆக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி 19ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக லக்னோவிற்கு விமானம் மூலம் செல்ல சுங்கத் துறை அதிகாரியான முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி திட்டமிட்டனர். அதனடிப்படையில் பெங்களூரு விமான நிலையம் அடைந்த சுங்கத்துறை அதிகாரி லக்னோ செல்லும் விமானத்தை தவற விட்டுள்ளார்.

image

அப்போது பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்தில் கணக்கில் வராத 75 லட்ச ரூபாய் பணம் மற்றும் 169 கிராம் தங்கம், 5 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை சென்னை சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி தஷிம் மும்தாஜ் ஆகியோரிடம் உடைமைகளை சோதனை செய்தபோது பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் அடிப்படையில் பெங்களூர் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது வீட்டில் சோதனை செய்தபோது 64 ஆயிரம் பணம் 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடிப்படையாக வைத்து சிபிஐ விசாரணை செய்ததில், சுங்கத் துறையில் சூப்பிரண்டாக பதவி உயர்வு அடைந்தவுடன் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்தாண்டு ஜனவரி வரை சம்பாதித்த பணத்தின் வரவு செலவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பார்த்தபோது அதிகமாக சொத்துக்களை குவித்தது தெரியவந்துள்ளது.

image

குறிப்பாக சொத்துக்களை குவித்ததாக சிபிஐ கூறும் காலகட்டத்திற்கு முன்பாக ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வைத்து இருந்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தாண்டு ஜனவரி மாதம் சோதனை செய்தபோது வரவு செலவு ஆகியவற்றைத் தவிர்த்து சுமார் 75 லட்சம் ரூபாய் சொத்துக்கள் வைத்திருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி தஷிம் மும்தாஜ் மீது சொத்துகுவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்