அதிமுக பொதுச் செயலாளர் என்று கல்வெட்டு வைத்தது தொடர்பாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
“அதிமுக கட்சி கொடியே சசிகலா பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் கட்சி கொடியை மீண்டும் சசிகலா பயன்படுத்தி வருகின்றார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாம்பல காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரெங்கநாதனிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் புகார் மனு அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “சசிகலா அதிமுகவில் உறுப்பினர் கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா என்று கூறி, சட்டத்தையும் சசிகலா கையில் எடுக்கிறார். அதன் மூலம் அவர் பொது வெளியில் குழப்பத்தை விளைவிக்க முயல்கிறார். அவர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வில்லை. அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும். திமுகவும் சசிகலாவும் இணைந்து உள்ளனர். சசிகலாவிற்கு திமுக உதவுகிறது” என ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்