வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத் தீவுப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படியுங்கள்: நிலச்சரிவுகளை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்க தீவிர முயற்சி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்