நாடெங்கும் 7 மிகப்பெரிய ஜவுளி பூங்காக்களை 4,445 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின் பேசிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மிகப்பெரிய ஜவுளி பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். மெகா ஜவுளிப் பூங்காக்கள் மூலம் 7 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 14 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும் பியுஷ் கோயல் தெரிவித்தார். இதற்கிடையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சர்வதேச ஜவுளி சந்தையில் இந்தியா வலிமையான இடத்தை பெற இத்திட்டம் உதவும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்