கர்நாடகாவில் கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
விஜயநகர் மாவட்டத்தில் உள்ள மகராபி கிராமத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு அங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. அதில் இருந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீரும் கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நீரைக் குடித்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஐந்து பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று கெஞ்சம்மா என்ற 65வயது மூதாட்டியும் உயிரிழந்தார்.
கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தங்கள் கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைப்படிக்க...விவசாயிகளை கொன்றவரை ஏன் கைது செய்யவில்லை - பிரதமர் மோடிக்கு பிரியங்கா கேள்வி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3owS0tl

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்