4 ஆண்டுகள் தன் மனதில் வைத்திருந்த பாரத்தை இன்று இறக்கிவைத்திருப்பதாக பேசியுள்ளார் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா
அதிமுகவின் 50-வது ஆண்டு தொடக்க விழா நாளை நடக்கவிருப்பதையொட்டி இன்றைய தினம் அதிமுக கொடி பொருத்திய காரில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நினைவிடத்துக்கு நான் ஏன் இத்தனை நாள் கழித்து தாமதமாக வந்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். கடந்த 4 ஆண்டுகளாக என் மனதில் இருந்த பாரத்தை இன்று இறக்கி வைத்துள்ளேன். அதிமுக கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதிமுக-வையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்” என்றார்.
தொடர்புடைய செய்தி: "சசிகலா நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்