அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்கள் நினைவிடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா சனிக்கிழமை மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக காவல்துறை பாதுகாப்பு கோரி அவரது சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளதால், அக்கட்சி சார்பிலும் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தலைவர்கள் நினைவிடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2YRE6aR

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்