Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

டி20 உலகக் கோப்பை: இந்தியாவை ஒருமுறை கூட வீழ்த்தாத பாகிஸ்தான் - ஓர் பிளாஷ்பேக்

https://ift.tt/3npPh2y

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய முந்தைய தருணங்கள் குறித்து பார்க்கலாம்.
 
பாகிஸ்தான் உடனான போட்டிகளில் துருப்புச் சீட்டாக விளங்கும் விராட் கோலி அமீரக அனலுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான உச்சகட்ட பரப்பரப்புடன் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தியாவை ஒருமுறை கூட உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தியதே இல்லை என்ற மிகப்பெரிய அழுத்தத்துடனும், வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற வேட்கையுடனும் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உள்ள வெற்றி மரபை தொடரும் உத்வேகத்தில் இந்திய அணி இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் 6 ஆவது முறையாக நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன.
 
image
டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடன் மோதிய இரண்டு போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றது. அத்தொடரில் முதல் போட்டியில் ஆட்டம் டிராவாகவே, BOWLED OUT முறையில் தோனியின் அசத்தலான வியூகங்களால் இந்தியா வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு இறுதிப் போட்டிக்கு வந்த பாகிஸ்தானை பந்தாடி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை வசப்படுத்தியது இந்தியா.
 
அதன் பின்னர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் அணிகள் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் களம் கண்டன. இலங்கை கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தானை 128 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா. விராட் கோலியின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 3 ஓவர்கள் எஞ்சியிருக்கும் போதே இந்தியா அபார வெற்றி பெற்றது.
 
இதையடுத்து 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் பொறுப்பான ஆட்டத்தால் 9 பந்துகள் எஞ்சியிருக்கும் போதே வெற்றி அடைந்தது.
 
image
இறுதியாக 2016 ஆம் ஆண்டு தாய் மண்ணில் விளையாடிய போட்டியிலும் இந்திய அணி வெற்றிக் கணக்கை தொடர்ந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 118 ரன்களை மட்டுமே எடுத்தது. ரன் மெஷினான விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் விளாசியதோடு, 13 பந்துகள் எஞ்சியிருக்கும் போதே இந்தியா இலக்கை எட்ட வித்திட்டார்.
 
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மட்டுமின்றி, 20 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் இந்தியாவிடம் முதல் வெற்றியை ருசிக்க பாகிஸ்தான் போராடி வருகிறது. ஆனால் சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்தியா, உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை பந்தாடியே வருகிறது. உலகக்கோப்பை வெற்றி மரபை இன்றைய போட்டியிலும் இந்தியா தொடருமா என்பதை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் உற்று நோக்கியுள்ளனர்.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்