Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

209 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 18346 பேருக்கு தொற்று உறுதி

https://ift.tt/2WK3pdO

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 209 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18,346 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 201 நாட்களில் பதிவான மிகக்குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆகும். அதிகபட்ச பாதிப்பாக கேரளாவில் 8,850 பேருக்கும், மகாராஷ்டிராவில் 3,165 பேருக்கும்,  மிசோரமில் 1,681 பேருக்கும், தமிழ்நாட்டில் 1,467 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 601 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 53 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.

image

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29,639 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 2 லட்சத்து 52 ஆயிரத்து 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 263 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: ரூ.1 லட்சம் வைத்திருந்த துண்டை உணவுப்பொட்டலம் என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்