ஜூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கும் அவர், நவம்பர் ஒன்றாம் நாள் எல்லைப் போராட்டத்தினை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணாவால் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nGYXGfஜூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கும் அவர், நவம்பர் ஒன்றாம் நாள் எல்லைப் போராட்டத்தினை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணாவால் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்