Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

புகையிலை எச்சில் கறையை நீக்க ஆண்டுக்கு ரூ.1,200 கோடி செலவழிக்கும் இந்திய ரயில்வே

https://ift.tt/3FA3diQ

புகையிலை மற்றும் வெற்றிலை எச்சில் கறையை அகற்ற ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரயில் நிலையங்களில் குறிப்பாக வட மாநில ரயில் நிலையங்களில் புகையிலை மற்றும் வெற்றிலை எச்சில் கறையை பல இடங்களில் காண முடியும். கடினமாக பற்றிக்கொள்ளும் இந்தக் கறையை அகற்ற மட்டும் ரயில்வே துறை ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாயை செலவளிக்கிறது. இது தவிர பல கோடி லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி ஒன்றை ரயில்வே மேற்கொண்டுள்ளது. கை அளவில் உள்ள பிரத்யேக காகித பாக்கெட் ஒன்று ரயில் நிலையங்களில் விற்கப்பட உள்ளது. பான் மசாலா, வெற்றிலை எச்சில் துப்பும் பழக்கம் உள்ளவர்கள் இதை வாங்கி பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்துவிட முடியும். எளிதில் மட்கி விடும் பொருளால் இது செய்யப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை என கூறப்படுகிறது.

image

5 முதல் 10 ரூபாய்க்குள் இருக்கும் இந்த பாக்கெட்டை 15 முதல் 20 முறை வரை கூட பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதை முதல் கட்டமாக வடக்கு, மேற்கு, மத்திய ரயில்வே மண்டலங்களில் 42 ரயில் நிலையங்களில் இயந்திரங்கள் மூலம் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் பிற ரயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க...“பிறந்தநாள் காணும் என் மகனுக்கு இதனை சமர்பிக்கிறேன்”-டெல்லியின் வியூகத்தை சிதைத்த உத்தப்பா 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்