Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

நாட்டில் இதுவரை 10 பேருக்கு புதியவகை கொரோனா உறுதி

இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா தொற்றின் தன்மை குறித்து ஆய்வு செய்துவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் ஆபத்தானது இல்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பரவி வரும் ஏ.ஒய்.4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா குறித்து ஐ.சி.எம்.ஆர். மற்றும் எம்.சி.டி.வி. ஆய்வு மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 10 பேருக்கு மட்டும் புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் மேலும் 76 பேருக்கு கோவிட் -19 தொற்று பாதிப்பு - BBC News தமிழ்

கடந்த ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டிராவில் உருமாறிய கொரோனா மாதிரிகள் பரிசோதனை மேற்கொண்டதில் ஏ.ஒய்.4.2. வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இந்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 6 பேருக்கு இந்தவகை கொரோனா கண்டறியப்பட்டது.ஏ.ஒய்.4.2 என்பது SARS-CoV-2 வைரஸின் டெல்டா மாறுபாட்டின் துணை பிரிவு என்றும், மிகவும் வேகமாக பரவக்கூடிய இந்த கொரோனா உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றும் ஐசிஎம்ஆர் விஞ்ஞானி சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா, பிரிட்டனில் அதிகம் பரவி வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வருவோரிடம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள் விஞ்ஞானிகள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3CmZumS

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்