Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அமீரகத்தில் ஐபிஎல்: முதல் போட்டியே செம்ம வெயிட்டு.. இதுவரை சிஎஸ்கே Vs மும்பை எப்படி?

கொரோனா தொற்று பரவல் அச்சத்தால் கடந்த மே மாதம் பாதியிலேயே கைவிப்பட்ட ஐபிஎல் 2021 தொடர் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர உள்ளது. இந்த இரண்டாவது பாதி தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதி விளையாட உள்ளன. 

image

இரண்டு அணிகளுமே ஐபிஎல் களத்தில் செம வெயிட்டான அணிகள். இந்த அணிகள் சோலோவாக மற்ற அணிகளுடன் இறங்கி விளையாடினால் ஆட்டம் அனல் பறக்கும். அப்படிப்பட்ட கெத்தான இரண்டு அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் அந்த ஆட்டம் அமர்க்களமாக இருக்கும். இரு அணிகளும் இதுவரையில் நடந்து முடிந்துள்ள 13 ஐபிஎல் சீசனில் நான்கு முறை இறுதி போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளன.

image

சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு முழு முதல் காரணம் அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. எட்டு முறை ஐபிஎல் இறுதியில் விளையாடி உள்ளது. அதில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதே போல 2020 சீசனை தவிர மற்ற அனைத்து ஐபிஎல் சீசனிலும் சென்னை அணி டாப் 4 ஆணிகளில் ஒன்றாகவே தொடரை நிறைவு செய்துள்ளது. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே மூன்று மற்றும் நான்காவது இடங்களை சென்னை பிடித்துள்ளது. 2016 மற்றும் 2017 சீசனில் சென்னை விளையாடவில்லை. 

நடப்பு 2021 சீசனின் முற்பாதியில் சென்னை அணி ஏழு ஆட்டங்களில் விளையாடி ஐந்து வெற்றிகளை பெற்றுள்ளது. அதன் மூலம் பத்து புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை சென்னை பிடித்துள்ளது. 

சென்னை அணி இந்த சீசனில் டெல்லி மற்றும் மும்பை அணிகளிடம் தோல்வியை தழுவியுள்ளது. டூப்ளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, ஜடேஜா, தீபக் சஹார், சாம் கர்ரன் மாதிரியான வீரர்கள் சென்னை அணிக்காக நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 

image

மும்பை இன்டியன்ஸ்

மும்பை இன்டியன்ஸ் அணியும் சென்னையை போலவே ஐபிஎல் களத்தை ஆட்சி செய்து வரும் அணி தான். அதுவும் ரோகித் ஷர்மா அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதலே பெர்பாமன்ஸ் எல்லாம் வேற லெவல். ரோகித், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், பாண்ட்யா சகோதரர்கள், பொல்லார்ட், பும்ரா, ராகுல் சஹார், டிகாக், போல்ட் என பல மேட்ச் வின்னர்களை கொண்டுள்ள அணி. 

ஐந்து முறை ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணி விளையாடியுள்ள ஆறு ஐபிஎல் பைனலில் ஒரே ஒரு முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்று முறை பிளே ஆப் சுற்றுடன் வெளியேறி உள்ளது. நான்கு முறை லீக் சுற்றுடன் நடையை காட்டியுள்ளது மும்பை.

சென்னை அணிக்கு எப்படி தோனியோ அது போல மும்பை அணிக்கு ரோகித். அவரது யூகிக்க முடியாத கள வியூகங்கள் அந்த அணியின் வெற்றிக்கு அஸ்திவாரம். 

நடப்பு சீசனில் ஏழு ஆட்டங்களில் நான்கு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆட்டங்களில் மும்பை அணி எதிரணியின் வெற்றியை தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் தட்டிப்பறித்துள்ளது. 

image

அமீரகத்தில் சென்னை மற்றும் மும்பை அணியின் செயல்பாடுகள் எப்படி?

2014 மற்றும் 2020 என இரண்டு முறை ஐபிஎல் தொடர் அமீரகத்தில் இதற்கு முன்னதாக நடைபெற்றுள்ளன. இதில் 2020 சீசன் முழுவதும் அமீரகத்தில் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமீரகத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளின் செயல்பாடு வெற்றியும், தோல்வியும் கலந்த கலவையாகவே இருந்துள்ளது. 2014 சீசனில் சென்னை அணியும், 2020 சீசனில் மும்பை அணியும் அமீரகத்தில் வெற்றிகளை குவித்துள்ளன. இதில் மும்பை அணி 2020-இல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடந்த சீசனில் சென்னை அணி லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறி இருந்தது. அதே போல மும்பை அணி 2014 சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்திலும் தோல்வியை தழுவியிருந்தது. 

image

மும்பை இன்டியன்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ்!

விளையாட்டு என்றால் அது மிகவும் சவாலான போட்டியாக எப்போதுமே இரு அணிகளுக்குள் இருக்கும். சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் மோதி விளையாடும் போது அந்த சவால் சற்று கூடுதலாக இருக்கும். சிலிர்ப்பு கொடுக்கும் GOOSEBUMPS மொமெண்ட்டுகளுக்கு இரு அணிகளும் உத்தரவாதம் கொடுக்கும். ஆட்டத்தின் இறுதி பந்து வரை த்ரில் நிறைந்ததாகவே இந்த அணிகளின் மோதல்கள் இருந்து வருகின்றன. 

இதுவரை ஐபிஎல் அரங்கில் இரு அணிகளும் 31 முறை நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் மும்பை 19 போட்டிகளிலும், சென்னை 12 போட்டிகளிலும் வென்றுள்ளன. இதில் ஐபிஎல் பைனலில் மட்டுமே இரு அணிகளும் நான்கு முறை மோதி உள்ளன. மும்பை 3 வெற்றிகளும், சென்னை 1 வெற்றியும் பைனலில் ருசித்துள்ளன. 

இரு அணிகளிலும் லீடிங் ரன் ஸ்கோரர்களாக ரெய்னா, ரோகித், தோனி, பொல்லார்ட் மற்றும் ராயுடு இருந்து வருகின்றனர். லீடிங் விக்கெட் டேக்கர்களாக மலிங்கா, பிராவோ, ஹர்பஜன், ஜடேஜா மற்றும் மோகித் ஷர்மா டாப் 5 இடங்களில் உள்ளனர். 

image

கடைசியாக வென்றது யார்?

இந்த சீசனில் கடைசி பந்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை. அந்த போட்டியில் சென்னை 218 ரன்களை எடுத்திருந்தது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது மும்பை. கடைசி பத்து ஓவர்களில் 138 ரன்களை குவித்திருந்தது மும்பை. 

அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் முனைப்பில் சென்னை இந்த ஆட்டத்தை அணுகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. த்ரில்லுக்கும், பரபரப்புக்கும் துளி அளவும் பஞ்சமில்லாத ஐபிஎல் அரங்கில் இந்த ஆட்டத்தின் மூலம் அனல் பறக்க உள்ளது. 

இதையும் படிக்கலாம் : பாதுகாப்பு குறைபாடுள்ள நாடா பாகிஸ்தான்? நியூசிலாந்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் உலகம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2XqUHkL

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்