தமிழகத்தில் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் விருப்பமுள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 20 மாவட்ட நிர்வாகிகளை நேற்று புஸ்ஸி ஆனந்த் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். அதில் தற்போது தேர்தல் நடைபெற உள்ள 9 புதிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இன்னும் சில மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் என 20 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் விரைவில் நடைபெற இருக்கும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என அந்த இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டபோது இது வழக்கமான முறை. ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு இருக்கின்றனர். அதில் வெற்றியும் அடைந்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர். அதே போல் வரும் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதனைப்படிக்க...டிக் டாக்கில் தொடங்கி யூ-டியூப்பில் முற்றிய மோதல்: பெண் கைது
- செந்தில்ராஜா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3tUzXhdதமிழகத்தில் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் விருப்பமுள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 20 மாவட்ட நிர்வாகிகளை நேற்று புஸ்ஸி ஆனந்த் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். அதில் தற்போது தேர்தல் நடைபெற உள்ள 9 புதிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இன்னும் சில மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் என 20 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் விரைவில் நடைபெற இருக்கும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என அந்த இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டபோது இது வழக்கமான முறை. ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு இருக்கின்றனர். அதில் வெற்றியும் அடைந்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர். அதே போல் வரும் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதனைப்படிக்க...டிக் டாக்கில் தொடங்கி யூ-டியூப்பில் முற்றிய மோதல்: பெண் கைது
- செந்தில்ராஜா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்