''நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வரும் 15ஆம் தேதி அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும், அதனடிப்படையில் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி, காவிரி நகரில் புதிய நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்ததோடு, அப்பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், இதில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3E455Qd''நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வரும் 15ஆம் தேதி அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும், அதனடிப்படையில் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி, காவிரி நகரில் புதிய நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்ததோடு, அப்பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், இதில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்