Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மதுவிற்கு அடிமையான மின்வாரிய ஊழியர் தற்கொலை: கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த சோகம்

மதுப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு மின்வாரிய ஊழியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
 
திருச்சி அருகே ஐயம்பட்டியை சேர்ந்த இளையராஜா என்பவர் மின் வாரியத்தில் பணியாற்றி வந்தார். மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த இவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் பேசிய வீடியோவில், மதுவிலிருந்து மீளமுடியாததால் தற்கொலை செய்வதாக கூறியுள்ளார்.
 
வீட்டில் மயங்கி கிடந்த இளையராஜாவை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 'உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் தன்னை மன்னித்து விடுங்கள் என்றும் தன்னுடைய மரணத்திற்கு குடிப்பழக்கமே காரணம் என கடிதம் ஒன்றையும் இளையராஜா எழுதி வைத்துள்ளார்.
 
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
 
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2VIE4jM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்