Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைக்குமா இந்திய அணி? - ஒரு அலசல்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 368 ரன்களை சேஸ் செய்தாக வேண்டும். அதில் இங்கிலாந்து அணி நான்காவது நாள் ஆட்டத்தில் 32 ஓவர்கள் விளையாடி விக்கெட் ஏதும் இழக்காமல் 77 ரன்களை எடுத்துள்ளது. 

image

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் 90 ஓவர்களில் 291 ரன்களை இங்கிலாந்து எடுத்தால் வெற்றி பெறலாம். ஓவருக்கு 3.23 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மறுபக்கம் இந்தியாவுக்கு அதே 90 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. 

image

என்ன நடக்கும்?

ஆட்டத்தின் தற்போதைய சூழலை வைத்து பார்க்கும் போது ஆட்டத்தின் முடிவு 40 சதவிகிதம் சமனில் (Draw) முடியவே வாய்ப்புள்ளது. மீதமுள்ள 60 சதவிகிதம் இரண்டு அணிகளும் வெற்றி பெற சம வாய்ப்புகள் உள்ளது. இதில் இந்தியாவின் கை ஓங்க விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. அதுவும் முதல் செஷனில் இங்கிலாந்தின் டாப் 4 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் இந்தியாவுக்கு தேவை. அதில் இங்கிலாந்து கேப்டன் ரூட்டும் உள்ளார். அந்த விக்கெட்டுகளை இந்தியா கைப்பற்றி விட்டால் வெற்றியை நெருங்குவது சுலபம். 

இங்கிலாந்து அணியும் இதே கணக்குடன் தான் இலக்கை சேஸ் செய்யும். என்ன அவர்களது சேஸிங் சேஃப் சோனில் (Safe Zone) இருக்கும். அதை செய்தால் கடைசி ஒரு செஷனில் இங்கிலாந்து அட்டாக் செய்ய வாய்ப்புள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக உள்ளது. வழக்கமான இங்கிலாந்து பிட்ச்கள் போல இது இல்லை. 

இந்திய பவுலர்கள் பும்ரா, உமேஷ் யாதவ், சிராஜ் மற்றும் ஜடேஜா என நால்வரும் இரண்டாவது இன்னிங்ஸில் டைட் லைனில் வீசியும் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை. இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களின் தவறுக்காக காத்திருப்பது போலவே உள்ளது இந்திய அணியின் ஃபீல்ட் செட் அப். அதுவும் முகமது சிராஜ், இங்கிலாந்தின் ஹசீப் ஹமீதுக்கு மிடில் அண்ட் லெக் திசையில் வீசி விக்கெட் வீழத்த முயன்று கொண்டே இருந்தார். ஜடேஜாவும் மற்றொரு இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பேர்ன்ஸுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். இருந்தாலும் விக்கெட்டை கைப்பற்றவில்லை. 

image

ஆடுகளம் சேஸ் செய்ய உதவுமா?

ஓவல் மைதானத்தில் அதிகபட்சமாக டெஸ்ட் போட்டியில் 263 ரன்கள் தான் சேஸ் செய்யப்பட்டுள்ளது. அதுவும் கடந்த 1902-இல் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த இலக்கை சேஸ் செய்தது. 1963-இல் வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களை சேஸ் செய்துள்ளது. அந்த நம்பர் இங்கிலாந்து அணியை இம்சிக்கலாம். ஒருவேளை இங்கிலாந்து 368 ரன்களை எடுத்துவிட்டால் அது ஓவல் மைதானத்தில் அதிகபட்சம் சேஸ் செய்யப்பட்ட ரன்களாக இருக்கும். 

அதை இந்திய பவுலர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இல்லை என்றால் இங்கிலாந்து டிராவுக்கு ஆடலாம். 

image

அஸ்வின் இல்லாதது பின்னடைவா?

இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாதது பின்னடைவு தான் என்ற விமர்சனங்கள் இப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு பந்து அதிகம் திரும்பவில்லை. ஆடுகளத்தில் உள்ள ரஃப் (Rough) பேட்ச்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஜடேஜா முயன்று வருகிறார். 

image

ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் ஆவதால் அஸ்வின் இந்த ஆட்டத்தில் விளையாடி இருந்தால் இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை தகர்த்திருப்பார். இப்போதைக்கு கோலிக்கு அணியில் உள்ள ரெகுலர் பவுலர்கள் ஆப்ஷனை தவிர்த்து பார்ட்-டைமாக பந்து வீசக் கூடிய பவுலராக ரோகித் உள்ளார். அவர் ஆப்-பிரேக் பவுலர். விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை எனில் ரோகித்தின் துணையை கோலி நாடலாம். இருந்தாலும் ரோகித் பெரிய ஸ்பெல் வீசியதில்லை. அதனால் அவரை குட்டி ஸ்பெல்லுக்கு பயன்படுத்தலாம். தவிர கோலியே கூட மீடியம் பேஸ் வீசலாம். கடைசியாக 2020 நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் கோலி பந்து வீசி இருந்தார். ஒருவேளை இந்திய அணி விக்கெட்டை கைபற்ற முடியாமல் போனால் அது அஸ்வின் இல்லாததால் இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

பார்ட்னர்ஷிப் அமையாமல் பார்த்துக் கொள்வது முக்கியமான விஷயம். அப்படியிருந்தால் தான் நெருக்கடியை தக்க வைக்க முடியும். இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அடுத்தப்போட்டியை பதற்றமின்றி விளையாட முடியும். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் இந்தியாவுக்கு அடுத்து இருக்கும் வாய்ப்பு, அடுத்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்வது அல்லது தோல்வி அடைந்து தொடரை இழப்பது. அதனால், இந்தப் போட்டியில் இந்திய நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.  

இதையும் படிக்கலாம் : '1 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு' - கார் நிறுவனங்களை அலறவிடும் 'சிப்' பற்றாக்குறை! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3DRDbXu

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்