Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மூடப்படும் ஃபோர்டு - மாற்று முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு தொழில்துறை விளக்கம்

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் குஜராத்தின் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் ஆலைகளை மூடுவதாக கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் உற்பத்தி செய்த கார்கள் விற்பனையாகாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஃபோர்டு நிறுவனத்தின் EcoSport, Ford Endeavour, Figo மாதிரியான கார்கள் விற்பனை ஆகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் உற்பத்தியாகும் கார்களை இந்தியாவில் கொண்டு வந்து விற்பனை செய்ய உள்ளதாக ஃபோர்டு விளக்கம் கொடுத்துள்ளது.  

image

சென்னை ஃபோர்டு உற்பத்திக் கூடம்!

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் முதன்மையான உற்பத்திக் கூடமாக இருந்தது சென்னை - மறைமலை நகர் பகுதியில் அமைந்ததிருந்த கூடம். கடந்த 1996-இல் இந்த நிறுவனத்தின் உற்பத்திக் கூடம் அமைக்கப்பட்டது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனம் அமைந்திருந்தது. 5000 கோடி ரூபாய் இதில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஆண்டுக்கு 4,40,000 கார்கள் மற்றும் 6,10,000 என்ஜின்கள் என இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் கார்கள் விற்பனையாகாத காரணத்தை சுட்டிக்காட்டி ஃபோர்டு விலகியுள்ளது. மேலும் வருவாயை காட்டிலும் செலவு அதிகம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியில் இயங்கி வரும் உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 

image

மாற்று முயற்சியில் தமிழக அரசு தீவிரம்!

ஃபோர்டு வெளியேறுகின்ற காரணத்தினால் தமிழ்நாடு அரசு மாற்று முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தொழில்துறை விளக்கம் கொடுத்துள்ளது. வேறொரு நிறுவனம் வந்தால் மீண்டும் ஊழியர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு என தொழில்துறை விளக்கம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3lcXI0c

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்