மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். எனினும் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றதால், மம்தா மீண்டும் முதலமைச்சரானார்.
இந்நிலையில், வரும் 30ஆம் தேதி பவானிபூர் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மம்தா பானர்ஜி முதலமைச்சர் பதவியில் நீடிக்க இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. பவானிபூரில் வெற்றிபெற்றிருந்த திரிணமூல் கட்சி எம்எல்ஏ, மம்தா போட்டியிட வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: பிராமணர்கள் பற்றி கருத்து - தந்தை மீதே வழக்குப்பதிவு செய்த சத்தீஸ்கர் முதல்வர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்