ரயில் பயணத்தின்போது மாணவர்கள் தகராறில் ஈடுபட்டால் பொதுமக்கள் எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்ணை ரயில்வே இருப்புப்பாதை காவல்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் இரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினர் சார்பில் மாணவர்கள் பாதுகாப்பாக ரயில் பயணத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
கல்லூரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும். முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், மாணவர்கள் அதிகளவில் ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
எக்காரணம் கொண்டும் படியில் நின்றுகொண்டும், ரயிலில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யக்கூடாது. ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதற்கு முன்பாக மாணவர்கள் ரயிலின் தகராறில் ஈடுபட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமான கைது நடவடிக்கைகள் குறித்தும் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் மாணவர்களுக்கு புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டு மூன்று வருடங்களாக பதிவுசெய்யப்பட்ட ரயில் விபத்து மரணங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெறும் அனைத்து விதமான குற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக தகவலை தெரிவிக்க இரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினர் 24X7 உதவி மைய எண் 1512 மற்றும் தொலை தொடர்பு எண் 9962500500 என்ற எண் அனைத்து பயணிகளுக்கும் தெரியும் வண்ணம் அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் வண்டிகளிலும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் மற்றும் மாணவர்கள் எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று சென்னை இருப்புப்பாதை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விழிப்புணர்வு முகாமில் காவல் துறை கூடுதல் இயக்குனர், அமலாக்கம் பொறுப்பு, இருப்புப்பாதை, சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறைத் தலைவர் இருப்புப்பாதை திருமதி கல்பனா நாயக், இருப்புப்பாதை துணைத்தலைவர் திருமதி ஜெயகவுரி, சென்னை காவல் கண்காணிப்பாளர் இருப்பு பாதை இளங்கோ, திருச்சி அதிவீரபாண்டியன், துணை கண்காணிப்பாளர்கள் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் காவல் ஆய்வாளர் பொறுப்பு, பெரம்பூர் மற்றும் எழும்பூர் ஆய்வாளர்கள் மாநில கல்லூரி முதல்வர் ராமன் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்கலாம்: சிறப்பாக பணியாற்றிய 5 எஸ்பி-கள் உட்பட 100 போலீசாருக்கு அண்ணா பதக்கம் - அரசு அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lpkNwFரயில் பயணத்தின்போது மாணவர்கள் தகராறில் ஈடுபட்டால் பொதுமக்கள் எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்ணை ரயில்வே இருப்புப்பாதை காவல்துறை வெளியிட்டுள்ளது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்