கோ ஆப்டெக்ஸின் லாபத்தை அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அதிகரித்துக்காட்டுவோம் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் சவால் விட்டு பேசினார்.
சட்டப்பேரவையில் கைத்தறித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், "கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நல்ல நிறுவனம் என்றும் ஆனால் கடந்தாண்டில் வாங்கிய துணிகள் தரமில்லாதவை என்றும் எனவேதான் அதன் துணிகளை விற்க விளம்பரம் கொடுத்தனர் எனவும் குறிப்பிட்டார். இதைக்கேட்ட எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைமுருகன் பேசுவது கைத்தறி நெசவாளர்களை கொச்சைப்படுத்தி பேசுவது போல் உள்ளதாகவும் மேலும் இவ்வாறு பேசுவது கோஆப்டெக்ஸ் மீது மக்களுக்கு அச்சத்தை அதிகரிக்கச் செய்யும் என்றார். இதன் பின் பேசிய அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கோ ஆப்டெக்சை அதிக லாபத்தில் இயக்கி காட்டப்போவதாகவும் இதை ஒரு சவாலாகவே கூறுவதாகவும் தெரிவித்தார்.
இதனைப்படிக்க: 4 பேருடன் விண்வெளிக்கு செல்லும் INSPIRATION4 விண்கலம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3tjsnfWகோ ஆப்டெக்ஸின் லாபத்தை அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அதிகரித்துக்காட்டுவோம் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் சவால் விட்டு பேசினார்.
சட்டப்பேரவையில் கைத்தறித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், "கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நல்ல நிறுவனம் என்றும் ஆனால் கடந்தாண்டில் வாங்கிய துணிகள் தரமில்லாதவை என்றும் எனவேதான் அதன் துணிகளை விற்க விளம்பரம் கொடுத்தனர் எனவும் குறிப்பிட்டார். இதைக்கேட்ட எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைமுருகன் பேசுவது கைத்தறி நெசவாளர்களை கொச்சைப்படுத்தி பேசுவது போல் உள்ளதாகவும் மேலும் இவ்வாறு பேசுவது கோஆப்டெக்ஸ் மீது மக்களுக்கு அச்சத்தை அதிகரிக்கச் செய்யும் என்றார். இதன் பின் பேசிய அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கோ ஆப்டெக்சை அதிக லாபத்தில் இயக்கி காட்டப்போவதாகவும் இதை ஒரு சவாலாகவே கூறுவதாகவும் தெரிவித்தார்.
இதனைப்படிக்க: 4 பேருடன் விண்வெளிக்கு செல்லும் INSPIRATION4 விண்கலம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்