பிரபல கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத்தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.
அதிமுக முன்னாள் அவைத்தலைவராக இருந்த கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலையில் புலமைப்பித்தனின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 86.
கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர் புலமைப்பித்தன். இவரது இயற்பெயர் ராமசாமி. நுாற்பாலையில் பணிபுரிந்தபடியே தமிழ் புலவர் படிப்பை நிறைவு செய்தார். 1964-இல் திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற, 'நான் யார்' என்ற பாடல் வழியாக திரையுலகில் நுழைந்தார். அடிமைப் பெண் படத்தில் எழுதிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் மூலம், அனைவரின் கவனத்தையும் பெற்றார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய வரலாற்றுப் பின்னணிப் படங்களுக்கு இவர்தான் பாடல்களை எழுதினார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/38QYREJபிரபல கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத்தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.
அதிமுக முன்னாள் அவைத்தலைவராக இருந்த கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலையில் புலமைப்பித்தனின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 86.
கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர் புலமைப்பித்தன். இவரது இயற்பெயர் ராமசாமி. நுாற்பாலையில் பணிபுரிந்தபடியே தமிழ் புலவர் படிப்பை நிறைவு செய்தார். 1964-இல் திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற, 'நான் யார்' என்ற பாடல் வழியாக திரையுலகில் நுழைந்தார். அடிமைப் பெண் படத்தில் எழுதிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் மூலம், அனைவரின் கவனத்தையும் பெற்றார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய வரலாற்றுப் பின்னணிப் படங்களுக்கு இவர்தான் பாடல்களை எழுதினார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்