Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'முதலை வேட்டைக்காரன்' ஸ்டீவ் இர்வினின் நினைவலைகள்!

https://ift.tt/3tm2kEP

முதலை வேட்டைக்காரன் என 90's KIDS களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்கியல் ஆர்வலரான ஸ்டீவ் இர்வினின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. வாழ்வின் பெரும்பகுதியை முதலை உள்ளிட்ட நீரினங்களுடன் செலவழித்த இர்வினின் நினைவுகளை திரும்பிப் பார்க்கலாம்.
 
முதலை வேட்டைக்காரன் என செல்லமாக அழைக்கப்பட்டாலும், உண்மையில் அவர் முதலைகளின் காதலனே. டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி உள்ளிட்ட சேனல்களை விரும்பிப் பார்த்த 90'ஸ் கிட்டுகளுக்கு இவர் மிகவும் பரீட்சயமானவர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்கியல் ஆர்வலரான ஸ்டீவ் இர்வின் தான் அந்த "முதலைகளின் காதலன்".
 
1962 ஆம் ஆண்டு பிறந்த விக்டோரியா மாகாணத்தில் பிறந்த ஸ்டீவ் இர்வின், முதலைகள் தொடர்பான பல்வேறு தொலைக்காட்சி ஆவணப்படங்கள் மூலம் உலகம் மூழுவதும் பல கோடி ரசிகர்கள் மனதை வென்றிருந்தார். 1996 இல் ஒளிபரப்பான இவரது கிராக்கடைல் ஹன்டர் என்ற நிகழ்ச்சி உலகின் 130 நாடுகளில் ஒளிபரப்பாகின. மெக்சிகோ, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு முதலைகள், பாம்புகள் மற்றும் அரிய வகை மீன்கள் குறித்து ஆவணப்படங்கள் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
 
image
கேமராவின் முன்பு தான் தனது இறப்பு இருக்க வேண்டும் என பலமுறை நேர்காணல்களின் போது கூறிக் கொண்டிருந்த இர்வினுக்கு, அவரது வார்த்தைகளைப் போலவே வாழ்வின் இறுதி நிமிடங்களும் அமைந்தன. ஆம் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பின் போது திருக்கை மீன் வகையிலான sting ray மீனின் வால் குத்தியதில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார். இர்வினை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 15 ஆம் தேதி ”ஸ்டீவ் இர்வின்” தினமாக ஆஸ்திரேலியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இர்வினின் மறைவிற்குப் பிறகு அவரது மகன், மகள், மனைவி என ஒட்டுமொத்த குடும்பமும் அவர் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து வருகின்றனர்.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்