உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் மக்களையும், உன்னதமான தத்துவத்தையும் நம்பி தனித்து களமிறங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், போட்டியிடாத இடங்களே இல்லை என்று சொல்லும் வகையில் வேட்பாளர்களை தேர்வுசெய்திட கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகத்திற்குக் காட்ட இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 50 விழுக்காடு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம். பொதுத் தொகுதியில் ஆதி தமிழருக்கு இடம், இஸ்லாமிய தமிழர்களுக்கு மற்ற எல்லாக் கட்சிகளைக் காட்டிலும் அதிக வாய்ப்புகள், தமிழர் நிலத்தில் காலம் காலமாய்ப் புறக்கணிக்கப்பட்ட பல எளிய சமூகங்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என இதுவரை ஆண்ட, ஆள்கின்ற கட்சியினர் எவரும் செய்யத் துணியாத புரட்சிகரச் செயல்களைக் கடந்த சட்டமன்றத்தேர்தலில் நாம் துணிந்து செய்திருக்கிறோம்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டி!
— சீமான் (@SeemanOfficial) September 15, 2021
நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிபடுத்திட மாநில, மாவட்ட, தொகுதி, பாசறை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் விரைந்து களப்பணியாற்றவேண்டும்!https://t.co/QH3sVScADD pic.twitter.com/8LCbFyCU0E
உண்மையான மாற்று அரசியல் என்றால் என்ன என்பதனை மக்களின் மனதில் பதிகிற அளவு உரத்த குரலில் முழங்கி, நாம் ஆற்றிய அரசியல் பணிகள் தமிழ்த்தேசிய இன விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
கடுமையான நோய்த்தொற்று பரவிவரும் இக்காலக் கட்டத்தில், நாம் தமிழர் உறவுகள் அனைவரும் தனிநபர் இடைவெளி, முகக்கவசம், கையுறை அணிதல், கிருமி போக்கிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, மிகுந்த கவனத்தோடு தேர்தல் களப்பணியாற்றுமாறு கோருகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
இதனைப்படிக்க...‘தற்கொலை தீர்வல்ல மாணவச் செல்வங்களே...’ - நீதிபதி கற்பக விநாயகம் சொன்ன குட்டி கதை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்