கொசுக்களால் பரவும் டெங்கு போன்ற நோய்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் நோய் பரவுவதை தடுக்க கொசு ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். பாதிப்பு உள்ள பகுதிகளில் நோய் பரவலை தடுக்க விரைவு குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இந்த நடவடிக்கைகள் கொரோனா தடுப்பை எவ்விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்