வேறு கட்சியில் இணைவதற்காக டெல்லிக்கு வரவில்லை என பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரிந்தர் சிங்குக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அம்மாநில அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து ராஜினாமா செய்த நிலையில், அமரிந்தர் சிங் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதால் அவர் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டன. இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு தொற்றிய நிலையில், வேறு கட்சியில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என டெல்லி சென்றடைந்த அமரிந்தர் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் வீட்டை காலி செய்வதற்காகவே தாம் வந்ததாகவும் அவர் விளக்கம் அளித்து, பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதனைப்படிக்க...பஞ்சாப்பில் அரங்கேறும் அரசியல் நாடகங்கள் - தத்தளிக்கிறதா காங்கிரஸ்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39OKkdbவேறு கட்சியில் இணைவதற்காக டெல்லிக்கு வரவில்லை என பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரிந்தர் சிங்குக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அம்மாநில அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து ராஜினாமா செய்த நிலையில், அமரிந்தர் சிங் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதால் அவர் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டன. இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு தொற்றிய நிலையில், வேறு கட்சியில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என டெல்லி சென்றடைந்த அமரிந்தர் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் வீட்டை காலி செய்வதற்காகவே தாம் வந்ததாகவும் அவர் விளக்கம் அளித்து, பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதனைப்படிக்க...பஞ்சாப்பில் அரங்கேறும் அரசியல் நாடகங்கள் - தத்தளிக்கிறதா காங்கிரஸ்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்