Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பிரதமர் மோடி தலைமையில் கொரோனா நிலவரம் குறித்து ஆய்வுக் கூட்டம்

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக இதுவரை எவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது, பாதிப்புகளின் நிலவரம் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர் நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
 
இரண்டாவது அலை முழுமையாக ஓயவில்லை என மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. செப்டம்பர், அக்டோபரில் கொரனோ மூன்றாவது அலை தாக்கும் என அச்சம் கொள்ளப்பட்ட நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷண் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து, இதுவரை மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 சதவிகிதம் பேருக்கு இரு தவணையும் செலுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் 72 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், நாள்தோறும் ஒரு கோடி பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2XhocFR

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்