திருப்பத்தூரில் மனைவியை தீயிட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ பதிவிட்ட நபர், போரூரில் நர்சிங் மாணவியொருவருடன் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா. இவரது கணவர் சத்தியமூர்த்தி, கடந்த 25ஆம் தேதி கோவிலுக்கு செல்லலாம் என கூறி மனைவி திவ்யாவையும் தங்களின் மூன்று வயது மகளையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது கொட்டாவூர் அருகே உள்ள ஒரு காலி நிலத்தில் சத்தியமூர்த்தி அவரது மனைவி திவ்யாவை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு 3 வயது மகளுடன் தப்பி சென்றுள்ளார். தப்பிச்சென்ற சத்தியமூர்த்தி, ”எனக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. என்னால் தன் மனைவியை பிரிந்து வாழ முடியாது. அதனால் என் மனைவியை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்” என வீடியோ பதிவிட்டு தலைமறைவானார்.
தொடர்புடைய செய்தி: திருப்பத்தூர்: "இனி எங்களால் வாழ முடியாது"- மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சத்தியமூர்த்தியை தேடி வந்தனர். இந்த நிலையில் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்த சத்தியமூர்த்தியின் மனைவி திவ்யாவின் தாய்மாமன் மகள் அர்ச்சனாவை காணவில்லை என போருர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், சத்தியமூர்த்தி திருப்பூரிலிருந்து காரில் வந்து மருத்துவமனை வளாகத்தில் காரை நிறுத்தி பின்னர் அர்ச்சனாவுடன் மாயமானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கந்தழி காவல்துறையினர் காரை பறிமுதல் செய்ததோடு தலைமறைவாக உள்ள சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர். மாணவியுடன் வாழலாம் என்ற நோக்கில் திட்டமிட்டு மனைவியை சத்தியமூர்த்தி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்