Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மாணவர் தற்கொலைக்கு அரசே காரணம்; நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆதரிப்போம் - எடப்பாடி பழனிசாமி

https://ift.tt/3hplTqU

நீட் விவகாரத்தில் திமுக மழுப்புவதாகவும், மாணவர் தற்கொலைக்கு திமுக தான் காரணம் எனவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பேரவையிலிருந்து வெளியேறிய பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''சட்டப்பேரவை தொடங்கியவுடன் அவசர நிகழ்வுகள் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு வந்தேன். வாசிம் அக்ரம் என்பவர் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் குடும்பத்துக்கு தேவையான நிதியுதவியையும் வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். 

image

நீட் தேர்வு ரத்து செய்யப்படுமென திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தார்கள். மு.க.ஸ்டாலினும் ஆட்சியமைத்த உடனேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார். ஆனால் ஆட்சி பொறுப்பேற்றும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.ஆளுநர் உரையின்போது கூட கேட்டேன். நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்று. ஆனால் அதற்கு முதல்வர் மழுப்பலான பதிலை தெரிவித்தார். இதனால் இன்று ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு பிரச்னையில் அரசு தெளிவான முடிவை திமுக அரசு சொல்லவில்லை. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை. மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுகவே காரணம். நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை அதிமுக ஆதரிக்கும்.

இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு மட்டும்தான் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறது. நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறியபோது அப்போதைய எம்பி ராசா நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என கேள்வி எழுப்பினார். இப்போது அவர்களுக்கு இது பொருந்துமா என கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்