மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை செயல்படுத்துவதில் மந்தமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை விழா மேடையிலேயே பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
நிவாரி என்ற இடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சிவ்ராஜ் சிங் சவுஹான் உரையாற்றினார். அப்போது கூட்டத்திலிருந்தவர்கள், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளில் ஒருவரைப் பற்றி சரமாரியாகக் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அந்த அதிகாரியை இப்போதே பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தார். குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: 'இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, கொதிக்குதடா நெஞ்சம்' - கமல் ஆவேசம்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nvvNeJமத்தியப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை செயல்படுத்துவதில் மந்தமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை விழா மேடையிலேயே பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
நிவாரி என்ற இடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சிவ்ராஜ் சிங் சவுஹான் உரையாற்றினார். அப்போது கூட்டத்திலிருந்தவர்கள், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளில் ஒருவரைப் பற்றி சரமாரியாகக் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அந்த அதிகாரியை இப்போதே பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தார். குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: 'இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, கொதிக்குதடா நெஞ்சம்' - கமல் ஆவேசம்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்