பிரச்னைகள் நீங்கி மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ள வடிவேலு, இயக்குனர் ஷங்கர் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவாகும் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலுவை, தான் தயாரித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் செய்தார் இயக்குனர் ஷங்கர். சிம்புதேவன் இயக்கிய அப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதையடுத்து 10 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் சங்கர், இயக்குனர் சிம்புதேவன், நடிகர் வடிவேலு ஆகியோர் திட்டமிட்டு அதற்கான படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கினர்.
ஈ.வி.பி அரங்கில் பெரும் பொருட் செலவில் அமைக்கப்பட்ட அரங்கில் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பின்னர் நடிகர் வடிவேலுவுக்கும், பட குழுவினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பிற்கும் வடிவேலு செல்லவில்லை.
சுமார் 12 கோடி ரூபாய்க்கும் மேல் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வடிவேலுவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, அவர் படங்களில் நடிக்க மறைமுக தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக வடிவேலுவால் படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான சூழலில் லைகா நிறுவனத்தின் தலைபர் சுபாஸ்கரன் மூலமாக வடிவேலு -இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்தது. மேலும் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெற்ற சம்பளத்திற்காக லைகா நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து கொடுப்பதாகவும் வடிவேலு ஒப்புக் கொண்டார். இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் வடிவேலு நடிக்கவுள்ள படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தமிழ்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய நடிகர் வடிவேலு, இனி தாம் ஷங்கர் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவாகும் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறினார்.
இதையும் படியுங்கள்: ஷங்கர் - ராம் சரண் படத்திற்கு திரைக்கதை.. வசனம் எழுதும் சு.வெங்கடேசன் எம்.பி?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்