தமிழகத்தின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றார்.
கொரோனா காலகட்டம் என்பதால், கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து காலை 10:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய ஆளுநரான ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா முடிந்ததும், தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39hDuwGதமிழகத்தின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றார்.
கொரோனா காலகட்டம் என்பதால், கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து காலை 10:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய ஆளுநரான ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா முடிந்ததும், தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்