பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தலிபான்களின் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய எதிர்ப்புப் படையினர் பணிந்துள்ளனர்.
34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 33 மாகாணங்களை கைப்பற்றி விட்டனர். ஆனால் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாஞ்ச்ஷிர் மாகாணம், தேசிய எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைக்க தலிபான்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில் அவர்களுக்கு தலைவலியாக இருக்கிறது பாஞ்ச்ஷிர் மாகாணம். இவர்கள் எப்போதும் யாரிடமும் அடிபணிந்தது கிடையாது என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பாஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு முன்னணி படையினர் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்களின் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய எதிர்ப்புப் படையினர் பணிந்துள்ளனர். பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தலிபான்களுக்கு தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: 600 தலிபான்கள் பலி: சிம்ம சொப்பனமாக விளங்கும் 'பாஞ்ச்ஷிர்' மாகாணம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்