நல்ல திரைப்படங்கள் வராததற்கு காரணம் நல்ல விமர்சகர்கள் இல்லாததே என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
ம.தொல்காப்பியன் எழுதிய 'சினிமா ஒரு காட்சி இலக்கியம்' என்ற புத்தக வெளியீட்டு விழா ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், மீரா கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வெற்றிமாறன், ''நல்ல திரைப்படங்கள் வெளியாவதில்லை என அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறோம்.
அதற்கு நல்ல விமர்சகர்கள் இல்லாமல் போனதே காரணம். கடந்த 25 ஆண்டுகளாக விமர்சனங்களை தான் கவனித்து வருவதாக கூறிய அவர், விமர்சகர்களும், விமர்சன அறிவும், விமர்சனக் கோட்பாடுகளும் தற்போது இல்லை. இங்கு வெகுசிலரே விமர்சனங்களை சிறந்த முறையில் எழுதுகின்றனர். பெரும்பாலானோர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, தாங்கள் சார்ந்த அரசியல் சார்புகளை விமர்சனங்களுடன் இணைத்து விடுகின்றனர். விமர்சனங்கள் என்பது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்'' என வெற்றிமாறன் கேட்டுக்கொண்டார்.
-செந்தில்ராஜா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்