ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு.ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு என்பது திமுகவுக்கு கைவந்த கலையாக இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது அதன் நிலைப்பாடாக இருந்ததாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர அக்கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றிபெறுவதற்காகவே பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம் என திமுக வாக்குறுதி அளித்ததோ என சந்தேகம் எழுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முந்தைய நிலைப்பாட்டை நிலைநாட்டி அவற்றின் விலை குறைய மு.க.ஸ்டாலின் வழிவகுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்