ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த முடிவு புத்திசாலித்தனமான முடிவு என்று கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களிடையே பேசிய ஜோ பைடன், ஆப்கானிஸ்தானில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்ற பிரச்னையைச் சந்திக்கும் நான்காவது அமெரிக்க அதிபர் என்று தன்னையே அவர் சுட்டிக்காட்டினார்.
ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, டொனால்டு ட்ரம்ப் ஆகியோரை நினைவுகூர்ந்த ஜோ பைடன், இந்த பொறுப்பை ஐந்தாவதாக ஒரு அதிபருக்கு அளிக்கப் போவதில்லை என்று கூறினார். மிகவும் நீண்ட ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஏற்கெனவே உறுதியளித்திருந்ததாகவும், தற்போது அதை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாக தெரிவித்த பைடன், இந்த முடிவு சரியான மற்றும் புத்திசாலித்தனமான சிறந்த முடிவு என்றும் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதத்துக்கோ அமெரிக்கர்களுக்கு தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கோ அமெரிக்கா அடிபணியாது என்றும் ஜோ பைடன் மேலும் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: யாருக்கெல்லாம் திருமண நிதி உதவி? - தமிழக அரசு விளக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்