குஜராத் துறைமுகத்தில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ஹெராயின் போதைப்பொருள் மிகப்பெரிய அளவில் சிக்கியிருப்பது தேச பாதுகாப்புடன் தொடர்புடையது என்று தெரிவித்தார். இவ்விவகாரத்தில் தொடர்புள்ளோரை தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்த ரந்தீப் சுர்ஜேவாலா, இவ்விவகாரத்தில் பிரதமர் பதில் ஏதும் பேசாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இதே விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்