புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம், மலையூர் கிராமத்துக்கு சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.
மலையூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது குறித்து புதிய தலைமுறையில் விரிவான செய்தி ஒளிபரப்பானது. இதனையடுத்து திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் வருவாய், வன மற்றும் காவல் துறையினர் 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையூர் கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுதொடர்பான அறிக்கையை ஆட்சியரிடம் அளித்த நிலையில், புதிய தலைமுறையிடம் பேசிய ஆட்சியர் விசாகன், மத்திய வனத்துறையின் ஒப்புதல் பெற்று விரைவில் மலையூர் கிராமத்திற்கு தார்சாலை அமைக்கப்படும் என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2V4bJEpபுதிய தலைமுறை செய்தி எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம், மலையூர் கிராமத்துக்கு சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.
மலையூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது குறித்து புதிய தலைமுறையில் விரிவான செய்தி ஒளிபரப்பானது. இதனையடுத்து திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் வருவாய், வன மற்றும் காவல் துறையினர் 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையூர் கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுதொடர்பான அறிக்கையை ஆட்சியரிடம் அளித்த நிலையில், புதிய தலைமுறையிடம் பேசிய ஆட்சியர் விசாகன், மத்திய வனத்துறையின் ஒப்புதல் பெற்று விரைவில் மலையூர் கிராமத்திற்கு தார்சாலை அமைக்கப்படும் என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்