Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

திருப்பூர்: அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேருக்கு கொரோனா: 3 நாட்கள் பள்ளி விடுமுறை

திருப்பூர் வீரபாண்டி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. சில பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில், திருப்பூர் வீரபாண்டி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.

image

இதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 4 மாணவிகளுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

image

இதன் காரணமாக அந்த பள்ளிக்கு இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் (20 தேதி முதல் 22ஆம் தேதி வரை) மூன்று நாட்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை திருப்பூர் மாவட்டத்தில் 25க்கும் அதிகமான மாணவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாம்: திருப்பதி: இன்று முதல் இலவச தரிசன டோக்கன் விநியோகம் - நாள்தோறும் 8000 பேருக்கு அனுமதி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3zkCKRT

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்